வானொலித் தொகுப்பும் உரைகளும்

ஒலிவழி சி.த.ப.மை/ பேட்டிகள்

24 நவம்பர் 2019, ஒலி 96.8FM, சிங்கப்பூர்த் தமிழ் கலைகள் மின்தொகுப்புகளின் நிறைவு நிகழ்ச்சி

கடந்த 20 மார்ச் 2019 அன்று சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 நடத்திய உரையாடல் நிகழ்ச்சியில், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் துவங்கப்பட்டதற்கான காரணங்கள், முக்கியப் பிரிவுகள், அதன் குறிக்கோள்களும், செயல்பாடுகளும் குறித்து இயக்குநர் அருண் மகிழ்நன் பகிர்ந்துகொண்டார். அதே நிகழ்ச்சியில் மையத்தின் பண்பாட்டுறவுத் துறைத் தலைவர் ஜெயசுதா சமுத்திரன், மாத இறுதியில் நடக்கவிருக்கும் “புத்தாண்டு — பல புதையல்கள்” என்ற நிகழ்ச்சி பற்றிக் கூறினார்.

eight directions

Speeches

eight directions

Speeches

உரைகள்

புத்தாண்டு: பல புதையல்கள்

சிங்கப்பூர் பலவிதமான பண்பாடுகளையும் அவை சார்ந்த விழாக்களையும் கொண்டாடி மகிழும் சூழலைக் கொண்டுள்ளது. இருப்பினும், ஒரு விழா ஏன் கொண்டாடப்படுகிறது? அதன் பின் உள்ள அடிப்படைத் தத்துவங்கள் என்ன?, சடங்குகளின் முக்கியத்துவம் என்ன? என்பதை முழுமையாக அறியாமல் உள்ளோம். கடந்த மார்ச் 31ம் தேதி,  சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம், “புத்தாண்டு –பல புதையல்கள்” எனும் நிகழ்ச்சியை  நடத்தியது. இதில், தமிழ்ப் புத்தாண்டு மட்டுமின்றி மற்றப் பண்பாடுகளில் கொண்டாடப்படும் ஆங்கில, சீன, இஸ்லாமிய புத்தாண்டு பற்றியும் தேர்ந்த அறிஞர்கள் தங்கள் கருத்துகளைப் பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் ஆங்கிலப் பேச்சுகளைக் கீழுள்ள இணைப்புகளின்வழிப் படித்து மகிழுங்கள்.
 
பல கலாசாரங்களைப் பிரதிபலிக்க, ஆங்கில சூஜி கேக், சீன நியான் காவ், மலாய் அபோக் அபோக், நாகாசாரி ஜாகுங், தமிழ்ப் பாயசம் ஆகியவை சிற்றுண்டிகளாகப் பரிமாறப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர் இந்தப் பல பண்பாட்டு உணவுப் படையலை வெகுவாக ரசித்தனர். இந்நிகழ்வில் சுமார் சீன, மலாய், இந்திய இனங்களைச் சேர்ந்த 150 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

ஆங்கிலப் புத்தாண்டு குறித்து முனைவர் ஜெஃப்ரி பெஞ்சமின்

புத்தாண்டு என்பது கால சுழற்சியின் தொடக்கத்தை குறிப்பதாகும். சில பண்பாடுகள் கதிரவனை மையமாகக்கொள்ளும், சில நிலவினை மையமாகக் கொள்ளும் என்றும், கிருத்துவ அடிப்படையிலான ஆங்கில கால அட்டவணை இரண்டையும் இணைத்துக் கொள்கிறது என்றும், கிருஸ்துமஸ் சூரிய நாட்குறிப்பேட்டிலும், ஈஸ்டர் சந்திர நாட்குறிப்பேட்டிலும் அமையும் என்று விளக்கினார். இவ்விரண்டு நாட்குறிப்பேடுகளும் ஒன்றி வாராது; அதாவது சூரிய வருடத்தில் 365.25 நாட்களும், சந்திர மாதத்தில் 29.5 நாட்களும் இருப்பதால், ஒரு வருடத்தில் 12.38 சந்திர மாதங்கள் இருக்கும் என்பன போன்ற சுவையான  அறிவுசார் நெருடல்களை முன்வைத்தார்

குறைவாக மேலும்

முஸ்லிம் புத்தாண்டு குறித்து முனைவர் முகமது இம்ரான் முகமது தாயீபு

இஸ்லாமிய மாதமான முகர்ரத்தின் முக்கியத்துவத்தையும், புத்தாண்டு பிறக்கும் அந்த மாதத்தை தீமைகளை விலக்கி, அமைதியையும், அன்பையும் போற்றும் மாதமாகக் கடைபிடிக்கும் வழக்கத்தைப் பற்றி விளக்கினார். மேலும் இஸ்லாமிய கால அட்டவனையில் ஒரு வருடத்திற்கு  354 அல்லது 355 நாட்களே இருப்பதினால், இஸ்லாமிய விழா நாட்களான நோன்புப் பெருநாளும், ஹஜ் திருநாளும் ஒவ்வோர் ஆண்டும் முன்னதாகவே வருமென்றும், காலத்தைக் கதிரவனைக்கொண்டு கணக்கிடிதலினும், நிலவைக் கொண்டு கணக்கிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதையும் புரிய வைத்தார்.

குறைவாக மேலும்

ஆங்கிலப் புத்தாண்டு குறித்து முனைவர் ஜெஃப்ரி பெஞ்சமின்

புத்தாண்டு என்பது கால சுழற்சியின் தொடக்கத்தை குறிப்பதாகும். சில பண்பாடுகள் கதிரவனை மையமாகக் கொள்ளும், சில நிலவினை மையமாகக் கொள்ளும் என்றும், கிருத்துவ அடிப்படையிலான ஆங்கில கால அட்டவணை இரண்டையும் இணைத்துக் கொள்கிறது என்றும், கிருஸ்துமஸ் சூரிய நாட்குறிப்பேட்டிலும், ஈஸ்டர் சந்திர நாட்குறிப்பேட்டிலும் அமையும் என்று விளக்கினார். இவ்விரண்டு நாட்குறிப்பேடுகளும் ஒன்றி வாராது; அதாவது சூரிய வருடத்தில் 365.25 நாட்களும், சந்திர மாதத்தில் 29.5 நாட்களும் இருப்பதால், ஒரு வருடத்தில் 12.38 சந்திர மாதங்கள் இருக்கும் என்பன போன்ற சுவையான  அறிவுசார் நெருடல்களை முன்வைத்தார்

Read Less Read More

முஸ்லிம் புத்தாண்டு குறித்து முனைவர் முகமது இம்ரான் முகமது தாயீபு

இஸ்லாமிய மாதமான முகர்ரத்தின் முக்கியத்துவத்தையும், புத்தாண்டு பிறக்கும் அந்த மாதத்தை தீமைகளை விலக்கி, அமைதியையும், அன்பையும் போற்றும் மாதமாகக் கடைபிடிக்கும் வழக்கத்தைப் பற்றி விளக்கினார். மேலும் இஸ்லாமிய கால அட்டவனையில் ஒரு வருடத்திற்கு  354 அல்லது 355 நாட்களே இருப்பதினால், இஸ்லாமிய விழா நாட்களான நோன்புப் பெருநாளும், ஹஜ் திரு நாளும் ஒவ்வொரு ஆண்டும் முன்னதாகவே வருமென்றும், காலத்தை கதிரவனைக் கொண்டு கணக்கிடிதலினும், நிலவைக் கொண்டு கணக்கிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதையும் புரிய வைத்தார்.

சீனப்புத்தாண்டு பற்றி முனைவர் விவியன் வீ

பன்றி, எருது, புலி, முயல், கடல் நாகம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, கோழி,  நாய் முதலிய ஆண்டுகளாக மட்டுமே நாம் அறிந்த சீன ஆண்டுகள் உலோகம், நீர், மரம், நெருப்பு மற்றும் நிலம், என்ற ஐம்பூதங்களின் கூட்டாக உலோக பன்றி ஆண்டு, உலோக எருது ஆண்டு என்று தொடங்கி, உலோக நாய் ஆண்டுடன் முடிந்து, நீர் பன்றி ஆண்டு என்று தொடரும். பன்னிரண்டு விலங்குக் குறியீடுகளும் ஒவ்வொரு சுழற்சியாக முடிந்து அடுத்த ஐம்பூதத்தின் சார்ந்த விலங்காண்டு வருவதற்கு அறுபது ஆண்டுகள் பிடிக்கும் என்றும், இது காலம் முடிவடையாமல் சுழன்று கொண்டே இருக்கும் என்று சீனப் பண்பாடு நம்பும் தத்துவத்தை சார்ந்து அமையும் எனும் சுவாரசியமான செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

குறைவாக மேலும்

தமிழ்ப் புத்தாண்டு குறித்து முனைவர் சுரேஷ்குமார் முத்துக்குமரன்

தமிழ்ப் புத்தாண்டின் கூறுகளையும், அதன் பின் உள்ள வரலாற்று, அறிவியல், நில, பூகோள அளவிலான காரணங்களையும், அதைக் குறித்த ஆய்வுகளையும் படங்களின் துணையுடன் விரிவாக விளக்கினார். நட்சத்திர கணிப்புகளில் முதலாவதான மேஷம் நட்சத்திரத்தில் கதிரவன் தன் மறு சுழற்சியில் நுழையும் சித்திரை முதல் நாளை புத்தாண்டாகக் கொள்வதாகத் தெளிவாக்கினார். இதற்கான மேற்கோள் பதினெங்கீழ்க்கணக்கு நூலான நெடு நல்வாடையில் இருக்கிறது என்பதையும், மேலும் திதி எனும் வார்த்தையில் இருந்து பிறந்ததுதான் தேதி; நிலவினை மையமாக வைத்துக் கணக்கிடப்படுபவை நாட்கள் என்பதையும், கதிரவனை மையமாக வைத்து அமைக்கப்பட்டவை மாதங்களும் வருடங்களும் என்பதையும் பார்வையாளர்கள் ஆர்வமெழ விவரித்தார்.

குறைவாக மேலும்

சீனப்புத்தாண்டு பற்றி முனைவர் விவியன் வீ

பன்றி, எருது, புலி, முயல், கடல் நாகம், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, கோழி,  நாய் முதலிய ஆண்டுகளாக மட்டுமே நாம் அறிந்த சீன ஆண்டுகள் உலோகம், நீர், மரம், நெருப்பு மற்றும் நிலம், என்ற ஐம்பூதங்களின் கூட்டாக உலோக பன்றி ஆண்டு, உலோக எருது ஆண்டு என்று தொடங்கி, உலோக நாய் ஆண்டுடன் முடிந்து, நீர் பன்றி ஆண்டு என்று தொடரும். பன்னிரண்டு விலங்குக் குறியீடுகளும் ஒவ்வொரு சுழற்சியாக முடிந்து அடுத்த ஐம்பூதத்தின் சார்ந்த விலங்காண்டு வருவதற்கு அறுபது ஆண்டுகள் பிடிக்கும் என்றும், இது காலம் முடிவடையாமல் சுழன்று கொண்டே இருக்கும் என்று சீன பண்பாடு நம்பும் தத்துவத்தை சார்ந்து அமையும் எனும் சுவாரசியமான செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தொடக்க விழா

திரு அருண் மகிழ்நன், தலைவர், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

வணக்கம்!​

இன்றைய தினம் -- 2019ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 6ம் தேதி -- சிங்கப்பூருக்கு,  குறிப்பாகத் தமிழர்களுக்கு, வரலாற்றுச் சிறப்பு​மிக்க ஒரு நாள். தென்கிழக்காசியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வருகை தந்து, வாகை சூடி, வாழ்க்கை நடத்தியிருந்தாலும், அவர்களின் வரலாற்றில் ஒரு தொடர்ச்சி இல்லாமல் போய்விட்டது. எனினும், இன்றைக்குச் சரியாக 200 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது, 1819ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 6ஆம் தேதி, அந்த நிலை முற்றிலும் மாறியது. அன்றுதான் சிங்கப்பூர் சாசனத்தில் சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ்  கையெழுத்திட்டு, கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஒரு வர்த்தக மையத்தை இங்கு நிறுவினார். அந்தத் தினத்திலிருந்து இந்த நிலத்தில் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு தொய்​வில்லாமல் தொட​ர்கிறது. அதற்குக் காரணம் அவர் தம்முடன் தமிழர்களையும் கொண்டு வந்திருந்தார். காலவோட்டத்தில் மற்றப் பல இனத்தவருடனும் மொழிப் பிரிவினருடனும் தமிழ்ச் ச​மூகமும் இங்குக் குடிபெயர்ந்து சிங்கப்பூரைத் தனது இல்லமாக்கிக் கொண்டது. ம​லாயாத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் என்ற நிலையிலிருந்து நாம் சிங்கப்பூர்த் தமிழர்களாகப் பரிணமித்திருக்கிறோம்.

தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று சொல்லிக்கொள்கிறோம். பெயரளவில் உள்ள அடையாளம் வாழ்வளவில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றதா என்பது கேள்விக்குறியே. நம்மில் பலர் நமது பண்பாட்டிலிருந்து வெகுதொலைவு வந்துவிட்டோம் அல்லது வேரறுந்து நிற்கிறோம். வருத்ததிற்குரியது என்னவெஎன்றால் உண்மையில் நாம் யார் என்று பிறரிடம் கூறும் நிலையில் நாம் இல்லை. ஏனெனில், நாம் யார் என்பது நமக்கே சரியாகத் தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில், மற்றவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்வது நமக்கு இன்னும் சிரமமாகும். அதற்கான அளவுகோல் நம்மிடம் இல்லை.

இந்தக் காரணங்களுக்காகத்தான் நாம் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் என்னும் ஒரு புதிய அமைப்பை உருவாக்கத் ​தீர்மானித்தோம். நாம் யார் என்பதை அறிந்துகொள்வதற்கும் நம்மைப்பற்றிப் பிறரிடம் பகிர்ந்துகொள்வதற்கும் மற்றவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் உதவும்.   

இந்த முயற்சி மேல்மட்டத்திலிருந்து வாராது கீழ்மட்டத்திலிருந்து   கிளம்பிய முயற்சி. அக்கறை​கொண்ட சில குடிமக்கள் ஆர்வத்தோடும் ஆற்றலோடும் கூடிச் செய்கின்ற முயற்சி. நம்மைப் பற்றிய ஆழ்ந்த அறிவை வளர்த்துக்கொள்வதற்கும் நம் இனத்திற்குச் செய்யவேண்டியவற்றைச் செய்வதற்கும் நம்மைப் பற்றிப் பிறரிடம் எடுத்துக்கூறுவதற்கும் மேற்கொள்கின்ற முயற்சி.  ​

நமது தமிழ் அடையாளத்தைத் தேடி, பராமரித்து, கொண்டாடும் அதே வேளையில் நாம் அனைவரும் முதலில் சிங்கப்பூரர்கள் என்பதை ஒருபொழுதும் மறக்கவே கூடாது. அதனால்தான் நாம் நமது இந்தப் புதிய பயணத்தைப் பாரதியின் தமிழ்த் தாய் வாழ்த்தோடும் அதைத் தொடர்ந்து ஸூபிர் சய்யதின் தேசிய கீதத்தோடும் தொடங்கியிருக்கிறோம்.

200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பயணம், தூர நோக்காலும் கடின உழைப்பாலும் சந்தர்ப்ப வசத்தாலும் இன்றும் தொட​ர்கிறது. சரியாக 200 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாம் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் என்னும் அமைப்பின் பெயரில் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறோம். இந்தப் பயணம் நலமே நடைபெற,  நல்வழி காட்ட நாம் அனைவரும் ஒன்றுகூடித் தீபங்களை ஏந்தியிருக்கிறோம். முடிவில்லாப் பயணமாகத் தொடரட்டும்!

நன்றி!

குறைவாக மேலும்

திரு அருண் மகிழ்நன், தலைவர், சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம்

வணக்கம்!​

இன்றைய தினம் -- 2019ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 6ம் தேதி -- சிங்கப்பூருக்கு,  குறிப்பாகத் தமிழர்களுக்கு, வரலாற்றுச் சிறப்பு​மிக்க ஒரு நாள். தென்கிழக்காசியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வருகை தந்து, வாகை சூடி, வாழ்க்கை நடத்தியிருந்தாலும், அவர்களின் வரலாற்றில் ஒரு தொடர்ச்சி இல்லாமல் போய்விட்டது. எனினும், இன்றைக்குச் சரியாக 200 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது, 1819ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 6ஆம் தேதி, அந்த நிலை முற்றிலும் மாறியது. அன்றுதான் சிங்கப்பூர் சாசனத்தில் சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்ஸ்  கையெழுத்திட்டு, கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஒரு வர்த்தக மையத்தை இங்கு நிறுவினார். அந்தத் தினத்திலிருந்து இந்த நிலத்தில் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு தொய்​வில்லாமல் தொட​ர்கிறது. அதற்குக் காரணம் அவர் தம்முடன் தமிழர்களையும் கொண்டு வந்திருந்தார். காலவோட்டத்தில் மற்றப் பல இனத்தவருடனும் மொழிப் பிரிவினருடனும் தமிழ்ச் ச​மூகமும் இங்குக் குடிபெயர்ந்து சிங்கப்பூரைத் தனது இல்லமாக்கிக் கொண்டது. ம​லாயாத் தமிழர்கள், இந்தியத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள் என்ற நிலையிலிருந்து நாம் சிங்கப்பூர்த் தமிழர்களாகப் பரிணமித்திருக்கிறோம்.

தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு என்று சொல்லிக்கொள்கிறோம். பெயரளவில் உள்ள அடையாளம் வாழ்வளவில் அடையாளப்படுத்தப் பட்டிருக்கின்றதா என்பது கேள்விக்குறியே. நம்மில் பலர் நமது பண்பாட்டிலிருந்து வெகுதொலைவு வந்துவிட்டோம் அல்லது வேரறுந்து நிற்கிறோம். வருத்ததிற்குரியது என்னவெஎன்றால் உண்மையில் நாம் யார் என்று பிறரிடம் கூறும் நிலையில் நாம் இல்லை. ஏனெனில், நாம் யார் என்பது நமக்கே சரியாகத் தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழலில், மற்றவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்வது நமக்கு இன்னும் சிரமமாகும். அதற்கான அளவுகோல் நம்மிடம் இல்லை.

தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்தின் தொடக்க விழா

திரு எஸ் ஈஸ்வரன், அமைச்சர், பிரதமர் அலுவலகம்

திரு அருண் மகிழ்நன், தலைமை ஒருங்கிணைப்பாளர், தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்

துணைப் பிரதமர் அவர்களே, அமைச்சர் அவர்களே, Elaine, Rosa, Rama, Paul, எழுத்தாளப் பெருமக்களே, பெரியோர்களே, நண்பர்களே: வணக்கம்!

இது ஒரு பொன்னான நாள்.  பொன்விழாக் கொண்டாடும் தருணத்தில் நிகழும் பொன்னான நாள். இவ்வளவு திரளாக வந்திருந்து இந்த விழாவைப் பெருமைப்படுத்திய உங்கள் அத்தனை பேருக்கும் எங்கள் முதல் நன்றி!

தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் --  ஒரு நாள் கொண்டாட்டத்தோடு ஓய்ந்துவிடாது, ஒரு நூறு ஆண்டுகளாவது நிலைத்திருக்குமாறு என்ன செய்யலாம் என்று “எண்ணித் துணிந்த கருமம்” இது. ஒரு சமூகத்திற்கு உண்மையிலேயே எது தேவை என்று தேடிப் பார்த்துத் தேர்ந்தெடுத்த திட்டம் இது.  எல்லாவற்றுக்கும் மேலாக நமது வரலாற்றை, நமது பண்பாட்டை,  நமது  படைப்புத்திறனை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் பொக்கிஷம் இது.

இத்திட்டத்தைப் பற்றியும் இதன் பயன்களைப் பற்றியும் பலரும் பேசிவிட்டார்கள். நான் மேடைக்கு வந்ததே நன்றி சொல்வதற்காகத்தான்.

நான் தலைவர் என்று அறிமுகப் படுத்தப்பட்டு உங்கள் முன்னால் நின்று கொண்டிருந்தாலும், எனக்குப் பின்னால் ஏறத்தாழ 300 பேர் வடம் பிடித்துக்கொண்டு வந்துள்ளார்கள் என்பதைத் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன். அதிலும், நாங்கள் அனைவரும் சாமானியக் குடிமக்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

ஊர் கூடினால்தான் தேர் நகரும் என்று சொல்வார்கள்.  ஊர் கூடியது.  தேரும் நகர்ந்தது. எனவே ஊருக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அத்தனை பேரையும் பெயர் சொல்லி நன்றிகூறத் தலைப்பட்டால், இரவு முடிந்து, பொழுது விடிந்துவிடும். எனவே, மொத்தமாகச் சில வகையினரைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியை எப்படியும் 90 நிமிடங்களில் முடித்துவிடுகிறோம் என்று வாக்குக் கொடுத்ததால், தமிழிலும் ஆங்கிலத்திலும் அதிகம் பேச நேரமில்லை. உங்களில் பெரும்பாலோருக்கு இத்திட்டத்தைப் பற்றி நிறையவே சொல்லி வந்திருக்கிறோம் என்பதாலும் நமது நன்றிக்குரியவர்களில் முக்கியமான சிலர் தமிழ் அறியாதவர்கள் என்னும் காரணத்தாலும் எங்கள் நன்றிகளைப் பெரிதும் ஆங்கிலத்திலேயே கூற உங்கள் அனுமதி வேண்டுகிறேன்.

குறைவாக மேலும்

திரு எஸ் ஈஸ்வரன், அமைச்சர், பிரதமர் அலுவலகம்

தமிழ் மின்மரபுடைமைத் தொகுப்பின் தொடக்கவிழா
22 ஆகஸ்ட் 2015, 6.00pm to 8.30pm, டிராமா நிலையம், தேசிய நூலகக் கட்டடம் 

பிரதமர் அலுவலக அமைச்சர், உள்துறை, வர்​த்தக தொழில் அமைச்சுகளுக்கான இரண்டாம் அமைச்சர்

திரு எஸ். ஈஸ்வரனின் உரை

1. துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான திரு தர்மன் சண்முகரத்தினத்துக்கும், அரசாங்க அமைப்புகளின் உயர் அதிகாரிகளுக்கும், ச​​மூகத் தலைவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும், ​தமிழ் மின்மரபுடை​மைத் திட்டக் குழுவினருக்கும் முதலில் எனது வணக்கம்.

2. சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வரலாற்றில் இன்று ஒரு முக்கியமான நாள். மறக்கமுடியாத நாள். இந்த ஆண்டு முழுவதும் நாம் சி​ங்கப்பூரில் ஐம்பதாவது ஆண்டு நிறைவை பல வழிகளில் கொண்டாடி வருகிறோம். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் நமது ​ஐம்பதாவது ​தேசிய தினத்தைப் பெருமிதத்துடன் கொண்டாடினோம்.

3. ஒரு கொண்டாட்டம் என்பது நாமெல்லாம் ஒரு நாளுக்கு ஒன்றுகூடி மகிழ்வதும்​ பெருமைப்படுவதும் மட்டுமல்ல. எதிர்காலச் ச​மூகம் தொடர்ந்து கொண்டா​ட நாம் என்ன செய்கிறோம் என்பதும் முக்கியமானது. அப்படி வித்தியாசமாக என்ன செய்யலாம் என்று நினைத்த சில சிங்கப்பூரர்கள் ஒன்று கூடி உருவாக்கிய ஒரு கதைதான் தமிழ் மின்மரபுமை​த் திட்டம்.

4. எழுத்தாளர்கள் சம்மந்தப்பட்ட ஒரு திட்டம் இது என்பதால் இதனைக் கதை என்று சொன்னேன். ஆனால் இது எழுத்தாளர்கள் எழுதும் கற்பனை​க் கதையல்ல. அவர்களின் எழுத்துக்களை எதிர்காலச் சந்ததியும் படித்து மகிழ்வதற்காக உருவான உண்மைக் கதை.

5. நாட்டின் ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ச​மூகத்தின் அன்பளிப்பாக இதனை வழங்கவேண்டும் என்று நினைத்த 15 பேர் அடங்கியக் குழு, இரண்டு ஆண்டு கடும் உழைப்புக்குப் பிறகு  இந்தக் கதையைச் சாத்​தியமாக்கியிருக்கிறது.

6. இந்த உன்னதமான தமிழ் மின்மரபுடைமைத் தொகுப்பின் தொடக்கவிழாவில் கலந்து கொள்வதில் நான் உண்மையில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

திட்டத்திற்கு ஆதரவு 

7. இதற்கு முன் இது போன்றதொரு முயற்சி சிங்கப்பூரில் மட்டுமல்ல, உலகில் வேறு எங்கும் மேற்கொள்ளப்பட்டதில்லை. 

8. நான்கு அரசாங்க அமைப்புகள் – தேசிய நூலக வா​ரியம், தேசிய மரபுடைமைக் கழகம், தேசிய​க் கலைகள் மன்றம், சிங்கப்பூர் தேசிய புத்தக வளர்ச்சி மன்றம் – ஆகியவை தொடக்கத்திலிருந்தே இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தர முன்வந்தன.

9. எண்ணமும் அதன் நோக்கமும் சரியாக இருக்கும்போது ஆதரவு தானாகவே வரும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

10. சுமார் 350 தமிழ் நூல்​களை மின்னிலக்கமாக்கி, அந்தத் தொ​குப்பைத் தனது BookSG இணையத் தளம் ​மூலம் சிங்கப்பூரர்களுக்கும் உலகிற்கும் வழங்கவிருக்கிறது தேசிய நூலக வாரியம்.

11. இது ஒரு மிகப்பெரிய, பிரம்மாண்டமான பணி. இதற்கு முன் இவ்வள​வு பெரிய அளவில் மேற்கொள்ளப்ப​டாத பணி.

12. திட்டங்களை அரசாங்கம்தான் முன்வைக்க வேண்டும் அல்லது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில்லை. எல்லாருக்கும் பொதுவான, தேவையான திட்டங்களைச் செய்வது அரசாங்கத்​தின் கடமை.

13. ஆனால், குடிமக்களும் அவர்களுக்குத் தேவையான திட்டங்களைத் துடிப்புடன் நிறைவேற்றுவதை இந்த அரசாங்கம் எப்போதுமே ஊக்குவித்து வந்துள்ளது. இந்தத் தமிழ் மின்மரபுடைமைத் திட்டமும் அப்படிப்பட்ட ஒரு திட்டம்தான். சிங்கப்பூரில் ச​மூகத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் உள்ள ஒ​த்துழைப்பையும் பங்காளித்துவத்தையும் இது காட்டுகிறது.

14. சிங்கப்பூரின் ஐம்பதாவது ஆண்டு நிறைவுக்காக வழங்கப்படும் இந்த அன்பளிப்பு அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு மட்டுமல்ல, காலம் உள்ளவரை சிங்கப்பூர் தமிழ் இலக்தியத்தை வருங்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாக்கும்!

15. இந்தத் திட்டத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளித்த அத்தனை எழுத்தாளர்களுக்கும், எதையும் எதிர்பார்​க்காமல் திட்டம் நிறைவேற தொ​ண்​​டூழியம் புரிந்த அத்தனை ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

16. இது ஒரு ச​மூக முயற்சி என்பதை பறைசாற்ற சிறிய ​அளவிலும் பெரிய அளவிலும் பொதுமக்கள் நன்கொடை வழங்கியுள்ளனர். அவர்கள் அனைவருக்குமே இந்த​த் தருணத்தில் நன்றி கூற விரும்புகிறேன்.

17. குறிப்பாக, இந்தத் திட்டத்திற்கு 30,000 வெள்ளி நன்கொடை வழங்கிய ஹாஜி அப்துல் ஜலீலுக்கும், இன்றைய நிகழ்ச்சிக்கு சிற்றுண்டி வழங்கி ஆதரவு தந்த காயத்ரி உணவகத்தின் திரு ஜி சண்முகத்துக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

நிறைவு

18. நமது கலாசார மரபுடைமையைக் கட்டிக்காக்கவும் மேம்படுத்தவும் இதுபோன்ற ச​மூக முயற்சிகள் இன்னும் அதிகமாக மேற்கொள்ளப்பட​ வேண்டும். பெரிய ச​மூகங்களைக் காட்டிலும் சிறிய ச​மூகங்கள் அவற்றின் கலாசாரத்தையும் மரபுடைமையையும் இழந்துவிடும் அபாயம் அதிகம். எனவே அவற்றைக் கட்டிக்காக்க அந்தச் ச​மூகங்கள் கூடுதலாக உழைக்க வேண்டும். அப்படிப்பட்ட உழைப்பின் பிரதிபலிப்புதான் இன்றைய நிகழ்ச்சியும், இன்றும் சற்று நேரத்தில் வழங்கப்படவிருக்கும் அன்பளிப்பும்.

19. இந்த வித்தியாசமான, பொருள் பொதிந்த அன்பளிப்பை சிங்கப்பூரின் சார்பில் ஏற்றுக் கொள்ள வந்திருக்கும் துணைப் பிரதமரு​ம் நிதியமைச்சருமான திரு தர்மன் சண்முகரத்தினத்திற்கு நன்றி.

20. இதனைச் சாத்தியமாக்கிய அரசாங்க அமைப்புகள், எழுத்தாளர்கள், தொண்​டூ​ழியர்கள், நன்கொடையாளர்கள், தமிழ் மின்மரபுடைமைத் திட்டக்குழு ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றி. 

வணக்கம்.

தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் என்னும் இத்திட்டம் இழக்கப் போவதையும் இனி வரப்போவதையும் கட்டிக் காக்க உருவான திட்டம். உங்களுக்கெல்லாம் தெரியும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியவாதிகள் எத்தனை பேர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள் என்பது. பரணன் போன்றவர்கள் அமரர் ஆகிவிட்டார்கள் என்பதோடு ஐ உலகநாதன் போன்றோர் வனவாசத்தில் இருக்கிறார்கள். அவர்தம் நூல்கள்கூட பாரதியினுடையது போன்றோ கண்ணதாசனுடையது போன்றோ கைக்கெட்டிய தூரத்தில் கிடைப்பதில்லை. தேசிய நூலகத்தை விட்டால், அவற்றிற்கெல்லாம் வேறு கதியே இல்லை. ஆயிரத்து எண்ணூறுகளிலிருந்து இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கும் நம் நாட்டு எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டிய பரப்பும் வரவேற்பும் சில பல காரணங்களால் எட்டாமலேயே போய்க்கொண்டிருக்கிறன. அந்தக் காரணங்கள் அனைத்தையும் தீர்க்கவோ குறைக்கவோ முடியாவிட்டாலுங்கூட, மிக முக்கியமான ஒரு காரணத்தை நாம் தீர்க்கமுடியும் அல்லது குறைக்கமுடியும் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவானதுதான் இந்தத் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்.​

இத்திட்டத்தின் வழி யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் சிங்கப்பூர்த் தமிழ் நூல்களை மின்வடிவில் தேடலாம், படிக்கலாம், பதிவிறக்கிக் கொள்ளலாம். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் சிங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு இது ஒரு காமதேனு. மேலும், மறைந்து போன, மறைந்து கொண்டிருக்கின்ற பல இலக்கியப் படைப்புகளுக்கும், ஏன் படைப்பாளிகளுக்கும்கூட, புத்துயிர் அளிக்கும் ஒரு வரப்ரசாதம். வருங்கால சந்ததியினருக்கு அள்ளி அள்ளி வழங்கக் கூடிய ஓர் அட்சய பாத்திரம்.

இடம், பொருள், ஏவல் கருதிச் செயல்பட்டால், காரியம் கைகூடும் என்பார்கள். அந்த வகையில், இத்தத் திட்டம் இந்த நேரத்தில் அரங்கேற்றப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. காலங்கருதி, ஒரு சிலவற்றை இப்போது குறிப்பிடுகின்றேன். பிறவற்றை, கேள்வி-பதில் நேரத்தில் பேசலாம்.

முதலாவது, தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்யக்கூடிய தொழில்நுட்ப சூட்சுமம் இப்போதுதான் கைகூடியுள்ளது. நூறு விழுக்காடு துல்லிதமாகச் செயல்பட முடியாவிட்டாலுங்கூட, போதுமான அளவு சரிவரச் செயல்படுகின்ற அளவு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

இரண்டாவது, நமது நாடு தனது 50வது சுதந்திரதின விழாவைக் கொண்டாடவிருக்கின்ற தருணம் ஒரு பொன்னான தருணம். அரிதாக வரும் அந்தத் தருணத்தில், நமக்குள்ள குறுகிய காலத்தையும் வசதியையும் கருதி 50 ஆண்டு இலக்கியத்தையாவது தக்கவைத்துக் கொள்வதுதான் இந்தத் திட்டம். 1965க்கு முன்னும் 2015க்குப் பின்னும் வந்த, வரப்போகும் இலக்கிய நூல்களைப் பின்னொரு கால கட்டத்தில் சேர்த்துக் கொள்வது வருங்காலத் திட்டம்.

மூன்றாவது, இந்த மின்னாக்க முயற்சிக்கு இன்றியமையாதவர்கள் நமது தமிழ் எழுத்தாளர்கள். அவர்கள் அனைவரும் 50வது வயதைக் கொண்டாடும் நமது நாட்டிற்கு ஓர் அன்பளிப்பாக தமது படைப்புகளை மின்னாக்கத்திற்கு அர்ப்பணிக்க எந்த விதத் தயக்கமும் காட்டமாட்டார்கள் என்னும் நம்பிக்கை ஒரு காரணமாகும். ஏற்கனவே பல படைப்பாளர்கள் தங்கள் மனமார்ந்த ஆதரவை எங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்கள்.

நான்காவது, எழுத்தாளர்கள் போன்றே, நமது சமூகத்தினரும் மனமுவந்து இந்தத் திட்டத்திற்கு ஆதரவளிப்பார்கள் என்பதும் ஒரு காரணமாகும். மின்னாக்கம் செய்யப்பட்ட பதிவுகளை ஒப்புநோக்கவும், நூல்களுக்குக் குறிப்புரைகள் வரைவதற்கும், ஓரளவு நிதியுதவி செய்வதற்கும் நமது சமூக ஆசிரியர்களையும் புரவலர்களையும் நாங்கள் பெரிதும் நம்பியிருக்கின்றோம்.

ஐந்தாவது, 50வது ஆண்டு விழாவின்போது இந்திய சமூகம் நடத்தப் போகும் ஏகப்பட்ட நிகழ்வுகளில் சிலவற்றைத் தொலைநோக்கும் ஆழ்பயனும் உள்ளடக்கியதாக ஆக்க வேண்டும் என்னும் அவா ஒரு காரணம். 2015ம் ஆண்டில் தமிழ் மின்னிலக்கியத் தொகுப்பை அனைத்துத் தமிழ் மொழி சார்ந்த நிறுவனங்களின் பேரிலேதான் நமது நாட்டிற்கு அன்பளிப்பாக வழங்க இருக்கின்றோம் என்பதால், இந்த முயற்சி தமிழ் சமுதாயம் முழுவதுமே பெருமைப்படக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியம்.

இறுதியாக, தேசிய நூலக வாரியம், தேசிய மரபுடைமைக் கழகம், தேசியக் கலை மன்றம், சிங்கப்பூர்ப் புத்தக வளர்ச்சி மன்றம் ஆகிய நான்கு அரசு சார்ந்த அமைப்புகளும் ஒருங்குகூடி முழுமனத்துடன் நமது சமூகப் பணிக்கு ஆதரவு தர முன்வந்திருப்பது மிக முக்கியமான காரணம்.

எனவே, இத்தொடக்க விழாவின்போது தமிழ் மின்மரபுடைமைத் திட்டக் குழுவின் சார்பில், நான்கு வேண்டுகோள்களை முன் வைக்கின்றோம்: ஒன்று, தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் தங்கள் நூல்களை மின்னாக்கம் செய்வதற்குத் தயங்காமல் ஒப்புதல் தர வேண்டுகிறோம். இரண்டு, தமிழ் வல்லுனர் பலரும் தாமே முன்வந்து மின்பதிவுகளைச் சரிபார்க்கவும் குறிப்புரைகள் எழுதவும் உதவ வேண்டுகிறோம். மூன்று, பொருள்வசதியுள்ள புரவலர்களும் இந்திய நிறுவனங்களும் நிதியுதவி செய்ய வேண்டுகிறோம். நான்கு, இத்திட்டம் நிறைவுபெறும் நேரத்தில், தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் பாடுபட்டு வரும் அத்தனை நிறுவனங்களும் தங்கள் பெயர்களை இத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறோம்.

குறைவாக மேலும்

திரு நா ஆண்டியப்பன், தலைவர், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

மின் மரபுடைமைத் திட்டத்தைத் தொடங்கிவைக்க வந்துள்ள துணைப் பிரதமர் திரு. தர்மன் சண்முகரத்னம் அவர்களே, இந்தத் திட்டத்திற்குத் தொடக்கத்தில் இருந்து ஆதரவு நல்கிவரும் பிரதமர் அலுவலக அமைச்சரும் திட்டத்தின் புரவலருமான திரு. எஸ். ஈஸ்வரன் அவர்களே, பெரியோர்களோ, தாய்மார்களே, எழுத்தாளர்களே, கவிஞர்களே உங்கள் அனைவருக்கும் முதலில் எனது வணக்கத்தைக் கூறிக்கொள்கிறேன்.

இந்த மாபெரும் திட்டம் சிங்கப்பூருக்கு அதன் பொன்விழா ஆண்டில் தமிழ்ச் சிங்கப்பூர்ச் சமூகம் வழங்கும் மிகப் பெரிய அன்பளிப்பு. உலகம் முழுதும் வாழும் தமிழர்களும் குறிப்பாகச் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்களும் இதனால் பயனடைவர். அவர்களின் படைப்புகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படும் அரிய முயற்சி இது.

எழுத்தாளர்களில் பலர், குறிப்பாக மூத்த எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளையே வைத்திருக்காத நிலையை நாம் இன்று காண்கிறோம். எப்போதோ படைத்து, எப்போதோ அச்சிட்டு, எப்போதோ வெளியிட்டு அதன் பிறகு ஒன்று, நூல்கள் அனைத்தும் தீர்ந்துவிடுகின்றன, அல்லது செல்லரித்துப் போய் வீணாகி விடுகின்றன. அவர்கள் இரண்டாம் பதிப்பும் போடுவதில்லை. அதனால் ஆய்வாளர்கள் தேடும்போது அவர்களின் நூல்கள் கிடைப்பதில்லை. இனி அந்தக் கவலை இல்லை. இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து நூல்களையும் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும், படிக்க முடியும்.

எங்களுடைய வேண்டுகோளை ஏற்று இந்தத் திட்டத்திற்கு நூல்களை வழங்கிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் இவ்வேளையில் நன்றிகூறிக் கொள்கிறேன். அதே வேளையில் ஒரு சிலர், குறிப்பாக மூன்று நான்கு பேர் இந்தத் திட்டத்திற்குத் தங்கள் நூல்களை வழங்க ஒப்பவில்லை. திட்டத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததே அதற்குக் காரணமாக இருக்கலாம். அவர்களும் விரைவில் மனம் மாறி தங்கள் படைப்புகளை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.

இந்த நேரத்தில் தேசிய நூலக வாரியம், தேசிய மரபுடைமை வாரியம் தேசியக் கலைகள் மன்றம், தேசிய புத்தக வளர்ச்சி மன்றம், ஆகிய நான்கு முக்கிய அரசாங்க அமைப்புகளுக்கும் தமிழ் எழுத்தாளர்கள் சார்பில் நன்றி கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவர்களின் முழு ஒத்துழைப்பு இல்லையென்றால் இத்திட்டம் வெற்றிபெற்றிருக்க முடியாது.

இறுதியாக நான் முன்பு குறிப்பிட்டதைப் போல், திட்டத்தின் தொடக்கத்திலிருந்து இன்று வரை முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் நல்கிய நமது அமைச்சர் திரு. ஈஸ்வரன் அவர்களை நாம் மறந்துவிட முடியாது. அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அரும்பாடுபட்டு இதனைச் சாத்தியமாக்கிய திரு. அருண் மகிழ்நன் அவர்களுக்கும் அவருடைய 15 தளபதிகளுக்கும் 250 தொண்டுப் படையினருக்கும் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி.

திருமதி ஜெயந்தி சங்கர், எழுத்தாளர்

வணக்கம்.

என்னுடைய அனுபவங்கள் வாயிலாக எனக்குக் கிடைத்த நம்பிக்கைகளைச் சொல்ல இருக்கிறேன். மின்னூல்கள் வாசிக்கும் Kindle போன்ற சாதனங்கள் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். எந்த மொழியாக இருந்தாலும் இனி வரும் தலைமுறையினர் அதிகமாக வாசிக்கப் போவது மின்னூல்களாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. ஆகவே, மின்னூல்கள் மேலும் பிரபலமடைய இந்தப் புதிய திட்டம் ஒரு முதற்படியாக அமையும். இதில் தேர்வுகள் என்று ஏதுமின்றி அனைவருடைய ஆக்கங்களையும் ஆவணப்படுத்த இருக்கிறார்கள். ஆகவே, தனி நபர் அளவிலும் இது ஓர் அரிய வாய்ப்பு.

புதிதாக வரும் போது எதுவுமே சின்னதொரு மிரட்சியை ஏற்படுத்தும். ஆண்டுகளுக்குப் பிறகு தான் அதன் பயன் தெரிய ஆரம்பிக்கும். அப்போது அதுவே இயல்பாகி விடும். தொழில்நுட்ப யுகத்தின் மாற்றங்களை ஏற்றால் பயன் என்னவோ நமக்கும் நம் மொழிக்கும் தான். ஆறாம் திணையான இணைய வெளியில் 2002 வாக்கில் எழுத ஆரம்பித்த காலம் தொட்டு எனக்குக் கிடைத்த வாசகர்கள் நாடுகளின் எல்லைகளைக் கடந்து உலகளவில் பரந்து பட்டவர்கள். வாசகர்கள், வாசக எழுத்தாளர்கள், எழுத்தாள வாசகர்கள் என்று எனக்குக் கிடைத்த நண்பர்களும் நிறையபேர். இப்போது இருக்கும் பரவலான இணையப்பயன்பாடு குறித்து பலரும் முன்னுணர்ந்ததைப் போல அப்போது நான் உணரவில்லை. இருப்பினும், மனதில் சந்தேகங்களே இல்லாமலே இணையவெளியை அன்று நான் ஏற்றேன்.

எழுத்தென்பது கலையாகும். இங்கே விலைக்கு வேலை இல்லை. அதனால்தான் எழுதுவது வேறு, அந்த எழுத்தைச் சந்தைப்படுத்துவது முற்றிலும் வேறு. அடிப்படையான இந்த விஷயத்தை அவ்வப்போது கணக்கிலெடுக்கத் தவறுவதுடன் இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறோம். சிங்கப்பூரில் என்று இல்லை தமிழிலேயே இன்றுவரை எழுத்தின் மூலம் பணம் சம்பாதித்தவர் மிகச் சிறிய விழுக்காடினர் தான். ஆகவே, அச்சுப்பிரதிகள் விற்காமல் போகுமே, கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போகுமே என்ற கவலையெல்லாம் தேவையே இல்லை என்பது எனது அனுபவப்பாடம். என்னைப் போல சந்தைப் படுத்தத் தெரியாதவர்கள் பிரதிகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமலும் வீட்டு அலமாரியில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்குமே என்றும் முன்பெல்லாம் ஏற்பட்ட ஏமாற்றமும் சலிப்பும் இப்போதெல்லாம் ஏற்படுவதில்லை. இதுவரை 24 நூல்கள் எழுதிய அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். குறைந்தபட்சம் நிறைய பேருக்கு வாசிக்கக் கிடைத்தால் எழுத்துக்கான நோக்கம் நிறைவேறியதாகவே நினைக்கிறேன்.

நூலகத்தில் பிரதிகள் கொடுக்கவேனும் முடிந்தவர்கள் அதிருஷ்டசாலிகள்! அந்த அதிருஷ்டம் மிகச் சில நூல்களைத் தவிர எனக்குப் பெரும்பாலும் வாய்த்ததில்லை. இருந்தும் விடாமல் தொடர்ந்து நான் எழுதுவது எழுத்தில் கிடைக்கும் ஆத்ம திருப்திக்காகத் தான். ஆனால், ஆத்மதிருப்தி என்பதே கட்டுக்கதை, ஆத்மதிருப்தியால் அரைக்கிலோ அரிசி வாங்க முடியுமா என்பது போன்ற விவாதங்களுக்குப் பொருளில்லை; அவற்றுக்கு முடிவுமியில்லை. இது போன்ற நல்ல திட்டங்கள் மூலம் எழுத்து மேலும் அதிகமானவர்களுக்குச் சென்றடையுமென்றால், எப்போதுமே மகிழ்ச்சி தானே. வாசகர் வட்டம் விரிவடையும் போது தான் எழுத்துக்கான, எழுதப்பட்டுள்ள கருத்துக்கான உரிய கவனமும் கிடைக்கும். படைப்புகள் வழியாக மொழியையும் வளப்பமுடனும் உயிர்ப்புடனும் அடுத்த தலைமுறையினருக்குக் கொடுக்க முடியும். இதற்கு மின்னூல்கள் பெருமளவில் உதவும்.

நம் தேசத்துக்கு பரிசாகவிருக்கும் மின்னூல் திட்டம் வேறு பல வாயில்களையும் திறந்து விடலாம் என்றே முன்னுணர்கிறேன். முக்கியமாக, அச்சுப்பிரதிகள் கொடுக்காத நிரந்தரத்துவத்தை நம் ஆக்கங்களுக்குக் கொடுக்கும். நல்வாய்ப்புக்கு நன்றி. வணக்கம்.