நாளும் ஒரு கீதம்

Logo

21 ஜூன் அன்று கொண்டாடப்படும் உலக இசை நாளை முன்னிட்டு  சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையம் இன்னிசை விருந்து ஒன்றைப் படைக்கவிருக்கிறது. பிரபல கர்நாடகப் பாடகரும் இளம் கலைஞர் விருதைப் பெற்றவருமான சுஷ்மா சோமா படைக்கும் இந்தத் தொகுப்பில் திறன்மிக்க உள்ளூர்க் கலைஞர்கள் இடம்பெறவிருக்கின்றனர். ஏழு நாள்களுக்குத் தொடர்ந்து தமிழ்க் கவிதைகளைக் கொண்ட இசைப் படைப்புகள் உங்களை மகிழ்விக்க வருகின்றன.