திர்தோ அர்தி சோர்ஜோவும் பாரதியும்
இந்தோனேசியப் பத்திரிக்கையாளருக்கும் இந்திய மகாகவிக்கும்
இடையே என்ன ஒற்றுமை?
-
பத்திரிக்கை அனுபவம்: இருவரும் சிறந்த சிந்தனாவாதிகள். தங்களது சிந்தனைகளையும் விமர்சனங்களையும் மக்களிடையே சேர்க்க பத்திரிக்கைத்துறையையும் செய்தித்தாட்களையும் வீரியமிக்கத் தளங்களாகப் பயன்படுத்தினர்.
-
காலனித்துவ ஆதிக்கம், தேசியவாதம்: டச் ஆட்சிக்குட்பட்ட கிழக்கிந்தியாவில் இருந்த திர்தோவும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவின் பாரதியும் காலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலை வேட்கையை வளர்த்ததில் முக்கியப் புள்ளிகள்.
-
பன்மொழித் திறமை: பல மொழிகளில் இருவருக்கும் இருந்த ஆளுமை பல்வேறு பண்பாட்டுப் பின்புலங்களைக் கொண்ட மக்களையும் சென்றடைய உதவியது.
-
புதிய சிந்தனை மரபு: தெற்குப்பகுதி நாடுகளில் நடந்த அறிவார்ந்த உரையாடல்கள் இருவரது பங்களிப்பாலும் செழுமையாகின. அவர்களது எழுத்துக்களை மீண்டும் வாசிப்பதால், நுசாந்திராவிலும் தமிழுலகத்திலும் நாம் பண்பாடுரீதியாகவும் வரலாறுரீதியாகவும் எங்கே இருக்கிறோம் என்று புரிந்துகொள்ள உதவுகிறது.
தலைப்பு: Eastern Voices Against Western Colonialism
பேச்சாளர்: முனைவர் அஸ்ஹார் இப்ராஹிம், மூத்த விரிவுரையாளர், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம்.
இணைப்பு: https://youtu.be/7RUwOWmW-kg