சிங்கப்பூர்த் தமிழ் இசை மின்தொகுப்பு
இந்திய இசை வகைகளுள் தமிழ் இசையும் கர்நாடக இசையும் சிங்கப்பூரின் பாரம்பரிய நடனத்திலும் இசையிலும் முக்கியக் கூறாகப் பல்லாண்டுகள் இருந்து வந்துள்ளன. இருப்பினும், இந்த நீண்ட இசைப்பயணம் சரியாக ஆவணப்படுத்தப்படவில்லை. நடனம், நாடகம் மற்றும் இலக்கியத்தைவிடப் பின்தங்கியிருந்தாலும், இசை தொடர்ந்து சிங்கப்பூரின் கலையுலகில் கணிசமான பங்கு வகிக்கிறது. இத்திட்டம், பாரம்பரிய இசைகளுள் குறிப்பாகத் தமிழிசை சிங்கப்பூரில் எவ்வாறு வளர்ந்து வந்துள்ளது என்பது பற்றிய கடந்தகாலப் பதிவுகளையும் தகவல்களையும் தொகுக்க முனைகிறது.
தமிழ் மின் மரபுடைமைக் குழுவின் மேற்பார்வையில் செயல்படுத்தப்படும் ஏனைய மின்தொகுப்புகளைப் போலவே, இத்திட்டம் தற்கால, எதிர்காலத் தேவைகளை நிறைவேற்ற உதவும். இது வளரும் பாடகர்களுக்கும் இசைஞர்களுக்கும் ஒரு வளமான கருவூலமாகப் பயன்படும். அதோடு, அவர்கள் தங்களது புத்தாக்க எண்ணங்களையும் பயிற்சிமுறைகளையும் இசை உலகினருடன் பகிர்ந்துகொள்ள ஏதுவான தளமாகவும் திகழும். இத்தொகுப்பும், எவருக்கும் எங்கேயும் பயன்படுத்த இலவசமாகக் கிடைக்கும்.
சிங்கப்பூர்த் தமிழ் இசை மின்தொகுப்பை 2018ம் ஆண்டு வெளியிடத் திட்டம் வகுக்கப் பட்டுள்ளது :
http://eresources.nlb.gov.sg/arts/website/Contents/DASTM.aspx
தலைமை ஒருங்கிணைப்பாளர்: குமாரி சுஷ்மா சோமா